கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோழிப்பண்ணையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.