Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வேலூரில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டுப்போனது. இதன் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களை  காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையில் பண்ணை வீட்டில் திருட்டு போனதற்கு காரணம் சம்பத் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சம்பத் வேலூர் மாவட்டத்திலுள்ள விருப்பாச்சிபுரத்தில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து பொது மக்களிடம் புழக்கத்தில் விட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு 80 ஆயிரம் மதிப்புள்ள 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் ஜெராக்ஸ் எந்திரம் இருந்துள்ளது. இச்சம்பவம் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்பதால் அங்கு இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 80 ஆயிரம் மதிப்புள்ள அந்த கள்ள நோட்டுகள் மற்றும் ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பத்தை திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை சென்றபின், கள்ளநோட்டு பறிமுதல் செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |