சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மயிலாடுதுறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மதுபான கடையின் அருகில் முட்புதரில், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அதிவீரன்பட்டியை சேர்ந்த பெரியாண்டி என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் திருத்தங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியாண்டியையும் கைது செய்ததோடு, அவர் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.