‘பத்துதல’ படத்தில் சிம்புவின் ஆட்டத்தை காண காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .
கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ என்ற படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு ,கௌதம் கார்த்திக் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க உள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், அசுரன் பட பிரபலம் டிஜே அருணாச்சலம், நடிகர் கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Wishing my Nedunchalai creator the greatest success. Waiting for the @SilambarasanTR_ @nameis_krishna @Gautham_Karthik aatam https://t.co/5E1LrFfcjQ
— Aari Arujunan (@Aariarujunan) January 19, 2021
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் ‘சிம்புவின் ஆட்டத்தை காண வெயிட்டிங்’ என பதிவிட்டு பத்து தல படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்து தல படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .