விருதுநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகள் அருகே கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அய்யனார் கோயில் செல்லும் சாலையில் இருக்கின்ற தனியார் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உணவு பொட்டலங்களின் கழிவுகள் போன்றவை கொரோனா வார்டுகள் அருகிலேயே குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன.
அந்தக் கழிவுகளை சரியான முறையில் சேமித்து வைக்காமல் அப்படியே கொட்டப்படுவதால், அங்கு வருகின்ற நாய்கள் அதனை இழுத்து செல்கின்றன. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து இத்தகைய சுகாதார சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருக்கின்ற மாவட்ட அலுவலர்கள் மீது அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.