தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், நடிகை மீனா, மாளவிகா, நடிகர் ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேடையில் தேவா பற்றி சொன்ன ஒரு விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிறது.
அதாவது சிங்கப்பூரின் ஆறாவது அதிபர் மறைந்த எஸ்.ஆர் நாதன். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். எஸ்.ஆர் நாதன் தான் இறக்கும்போது தன்னுடைய இறுதி சடங்கில் இசையமைப்பாளர் தேவாவின் பாடலை தான் ஒளிபரப்ப வேண்டும் என்று தன்னுடைய கடைசி ஆசையாக டைரியில் எழுதி வைத்துள்ளார். குறிப்பாக பொற்காலம் என்ற படத்தில் இடம் பெற்ற தஞ்சாவூர் மண்ணு எடுத்து என்ற பாடலை தான் இறுதிச்சடங்கில் ஒலிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் எஸ்.ஆர் நாதனின் விருப்பப்படி அவருடைய இறுதிச்சடங்கில் தஞ்சாவூர் மண்ணு எடுத்து என்ற பாடலை சிங்கப்பூரில் ஒலிபரப்பியுள்ளனர்.
அதோடு மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலை மொழிபெயர்த்து ஒலிக்க செய்துள்ளனர். தேவாவின் பாடலை உலக நாடுகள் கொண்டாடி பெருமைப்படுத்திய நிலையில், நம் நாட்டின் பத்திரிக்கையில் கூட அந்த செய்தி வரவில்லை என ரஜினி வருத்தத்தோடு கூறியிருந்தார். இந்த தகவலை ரஜினிகாந்த் சொன்னதிலிருந்து சிங்கப்பூர் மறைந்த அதிபர் எஸ்.ஆர் நாதன் மற்றும் அவருடைய இறுதிச் சடங்கில் ஒளிபரப்பப்பட்ட பாடல் போன்றவைகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுதான் அந்த நிகழ்வு #DevaConcert #DevaHits #Singapore #nathan https://t.co/t2eyV4EMji pic.twitter.com/mQc3busVXE
— ஐடி பொண்ணு 👩💻 (@itponnu) November 21, 2022