Categories
டெக்னாலஜி பல்சுவை

பட்டா பதிவிறக்கம் செய்யணுமா…?” ஆன்லைனிலேயே ஈஸியா பண்ணலாம்”… எப்படி தெரியுமா..?

ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

பட்டாப் பதிவு என்பது நில உரிமை மற்றும் நில அளவை தொடர்பான உள்ளீடு ஆகும். ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ் பட்டா. கிராமப்புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படும். இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது ஒரு பார்ம் கிடைக்கும். அதில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்று கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எதை சேர்ந்தவர்கள் என்பதை தேர்வு செய்து சப்மீட் கொடுக்க வேண்டும். உங்களது மாவட்டம், வட்டம் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். பிறகு உங்களது பட்டா எண், புல எண்ணை கொடுக்க வேண்டும். அந்த  பகுதியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் security codeஐ டைப் செய்து சப்மீட் கொடுக்கவேண்டும். அப்போது உங்களது பட்டா தொடர்பான விவரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

Categories

Tech |