Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பட்டாஸ்’ பட நடிகைக்கு திருமணம்… மாப்பிள்ளை அரசியல்வாதியாமே…!!!

நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்த நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை மெஹரீன் பிர்சாடா இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘நோட்டா’ படத்தில் நடித்தார் . பின்னர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமடைந்தார் . இவர் தெலுங்கிலும் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் .

மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்

இந்நிலையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவரை காதல் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வருகிற மார்ச் 13ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பவ்யா பிஷ்னோய் அரசியலில் ஈடுபட்டு வருவது  குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |