விஜயின் திகில் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் தனக்குப் பிடித்த ஹீரோவின் படம் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலருக்கு டபுள் கொண்டாட்டமாக அமையும் . சென்ற வருடம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான பேட்ட திரைப்படமும் , தல அஜித் குமாரின் விசுவாசம் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
அதேபோல் இந்த வருடமும் தமிழகத்தின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இச்சமயத்தில் , இந்தியாவின் புரூஸ்லி என அழைக்கப்படும் தனுஷின் புதிய திரைப்படம் பட்டாஸ் என பெயரிடப்பட்ட வேளையில் இந்த படம் தீபாவளி அன்று விஜய் படத்திற்கு போட்டியாக வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
ஆகையால் , இந்த வருடம் விஜய்யின் பிகில் திரைப்படமும், தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் இந்த வருடம் தீபாவளி அன்று தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் , தனுஷின் பட்டாசு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.