Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு அறைகளுக்கும் தீ வேகமாக பரவியதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

அப்போது பணியில் இருந்த ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மற்றும் சிவகாசியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |