பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம் என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.