Categories
மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு…. பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12‌ ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கும் முன்பு தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வு நடக்க கூடிய வழக்கில் உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவிகளுக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை போல ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில் கல்வி உரிமைச் சட்டம் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதன் பிறகு ஆசிரியர் சக்திவேல் தரப்பில், தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் கல்வி உரிமைச் சட்டங்களுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று வாதிடப்பட்டது. இந்த அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வி வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியை காரணம். சிறந்த கல்வி தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வி வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருந்ததிலிருந்து அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டி நீதிபதி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டு கலந்தாய்வை தள்ளி வைத்து விதைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |