Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. பேரனின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது அருந்த பணம் தர மறுத்த பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய பேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலை குப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இவர் மது அருந்த கோவிந்தம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கோவிந்தம்மாளை தாக்கினார். இதுகுறித்து கோவிந்தம்மாளின் மகன் தங்கப்பன் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |