Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எங்க தேடியும் கிடைக்கல” தொழிலாளி அளித்த புகார்…. தேடும் பணியில் தீவிரம்….!!

பாட்டியுடன் 2 பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியாள் என்ற மகள் உள்ளார். இவருடைய கணவரான கோபால கிருஷ்ணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் மன வருத்தத்துடன் இருந்த செல்வமணி மரியாளின் மகள்களான ஜோஸ்பின், இன்ஷா ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாட்டி செல்வமணி மற்றும் 2 குழந்தைகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |