Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டையில் விவசாய நிலத்தில் பழங்கால சிலை கண்டெடுப்பு…!!

பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி  காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்  தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக  குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று ஒரு சத்தம் வருகிறது.

உடனே எடுத்து பார்க்கையில்  ஒரு அடி ஆழத்திலேயே கிட்டத்தட்ட 4 சாமி சிலைகள் ஒவ்வொரு சிலையும் 3 இன்ச், 4 இன்ச்,5 இன்ச் இருக்கும். ஆனால் எல்லாம் கை அடங்கு சிலைகள்தான். ஒரு நான்கு சாமி சிலைகள், நான்கு கலயங்கள்,5 கிண்ணங்கள் அப்புறம் அந்த உலகங்களை உருட்டி பாக்குற  கல்லு ஒன்னு, தட்டு ஒன்னு, மண் பானை ஓடு ஒன்று. கிட்டத்தட்ட ஒரு 27 பொருட்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த சாமி சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படுகிறது. உடனே அந்த விவசாயி இத பாத்துட்டு இதுகுறித்து பட்டுக்கோட்டை ஆட்சியர் பாலச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரின் உத்தரவின் பெயரில் சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை தாசில்தார், வருவாய்த்துறை, காவல் அதிகாரிகள் வந்து அந்த சாமி சிலைகள் போன்ற பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவை அனைத்துமே ஐம்பொன் சிலைகள் என்றும் அவை பழங்கால பொருட்களாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இது தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |