பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது . கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து வந்தார்.
. #பொங்கல்வாழ்த்துக்கள் pic.twitter.com/Ml6hUekq45
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 14, 2021
இதைத் தொடர்ந்து நடிகர் ஆரியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் . இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பட்டுப்புடவையில் மின்னும் லாஸ்லியாவின் இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.