Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகர மன்ற உறுப்பினர் படுகொலை…. வலைத்தளங்களில் பரவும் காட்சி…. முதலமைசருக்கு வேண்டுகோள்….!!

படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க கட்சி பொதுச் செயலாளர் தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி நேரில் சென்று அவருடைய தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதன்பின் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதில் அவர் கொலை செய்யப்பட்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வேதனை ஏற்படுத்துகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்ய வேண்டும் என கட்சியின் பொது செயலாளர் கூறியுள்ளார். இது குறித்த வழக்கு ஆரம்பத்தில் பரபரப்பாக ஆர்வத்துடன் காட்டி நீர்த்து போக செய்து விடக்கூடாது அதை ஒரு போதும் மனிதநேய ஜனநாயக கட்சி அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். பின்னர் குற்றவாளிகள் 3 மாதம் தண்டனை பெற்ற பின் வெளியே வரலாம் என கருதினால் சட்டத்தின் துணையுடன் ஜனநாயக வழியில் தண்டனை பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவை சந்தித்து முறையிட இருப்பதாகவும் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்து வழக்கை விரைந்து நடத்த வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்டிருக்கும் வசீம் அக்ரம் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 20 லட்சம் ரூபாய் மற்றும் அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |