பாசன வசதிக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கிவருகிறது. இதனையடுத்து இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த மாதம் 15-ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில கீழ்பவானி வாய்க்காலில் ஈரோடு அருகே ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையிலிருந்து வாய்க்காலில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அணைக்கு வினாடிக்கு 829 கன அடி தண்ணீர் வந்தது. இதனைத்தொடர்ந்து அணையிலிருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 488 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் உபரி நீர் வினாடிக்கு 112 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி என மொத்தம் 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த மாதம் 25 -ஆம் தேதியிலிருந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக அதிகரித்து வருகின்றது.