பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு
நாம் அழகுக்காக பூ செடிகளை வீட்டில் வளர்த்து வருகிறோம் ஆனால் எத்தனை பேருக்கு பூக்களில் இருக்கும் மருத்துவ தன்மை தெரியும் அனைத்துப் பூக்களும் ஏதேனும் ஒரு மருத்துவ தன்மை இருப்பது உறுதி. மழை பெய்யும் காலத்தில் கொசுக்களால் ஏற்படும் மலேரியா டெங்கு போன்ற காய்ச்சலுக்கு பவளமல்லியை மருந்தாகக் கொடுத்தால் விரைவில் காய்ச்சல் குணமாகும்.
- பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில் பவளமல்லி இலை பனங்கற்கண்டு ஆகியவை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் இரண்டு வேளைகள் குடித்து வந்தால் மூட்டு வலி, மூளைக்காய்ச்சல் அனைத்தும் சரியாகிவிடும்.
- பவளமல்லி செடியின் இலையை கசாயம் செய்து அருந்தி வந்தால் டைபாய்டு காய்ச்சல் சரியாகும்.
- இஞ்சிச்சாறுடன் பவளமல்லியின் கொழுந்து இலையை சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குறைவதை காணலாம்.
- பவளமல்லியின் இலையை மண்சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக வற்றும் வரை காய்ச்சி அருந்தினால் இதயம் பலம் பெறும்.
- பவளமல்லியின் இலையை வெந்நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் முதுகு வலி பறந்து போகும்.