Categories
அரசியல்

144….. நீங்க வரவே தேவையில்லை….. ஆன்லைனில் கட்டணத்தை செலுத்துங்க….!!

144 தடை உத்தரவால் ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சார வாரியத்திடம் கட்டணம் செலுத்த உள்ளோர் இணையதளம் மூலம் கட்டுமாறு தமிழக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

144 தடை உத்தரவால் ஏப்ரல் மாதத்திற்கான ரிடிங் எடுக்கப்பட வில்லை. ஆகையால் பொதுமக்கள் கடந்த மாதம் செலுத்திய அதே கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் கட்டிய தொகை அதிகமாக அல்லது குறைவாக இருப்பினும், அவர்கள் பயன்படுத்திய இணைய தள கணக்கு மூலம் அது சரி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டணத்தை செலுத்த விரும்புவோர் மின்வாரிய நிலையத்திற்கு நேரடியாக வராமல் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே கட்டும்படி மின்சார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |