செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது
பரந்தூர் விமான நிலையத்திலும் தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கோரிக்கையை தான் வைக்கின்றோம். பாதிக்கப்படுகின்ற மக்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும், அவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்களை கட்டாயப்படுத்தி வளர்ச்சி என்ற பெயரால் தூக்கி எரியக் கூடாது. விமான நிலையத்திலும் அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. NLC-யில் என்ன நிலைப்பாடோ, அதைதான் பரந்தூர் விமான நிலைய விவகாரத்திலும் சொல்கின்றோம்.
பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், தொழில் துறை அமைச்சரும் மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்கள். நிரந்தர வேலை தரப்படும் என்கிறார்கள், ஒன்று விமான விமான துறையில் தருகிறோம், இல்லை என்றால் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலையை கொடுப்போம் நிலத்தை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக NLCஇல் என்ன சொல்கிறார்கள் ? என்றால் காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் சொல்லி, விவசாயிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் மிரட்டி நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கின்றார்கள்
அப்போ பரந்தூர்க்கு ஒரு நிலைப்பாடும், NLC-க்கு ஒரு நிலைப்பாடும் எடுக்க கூடாது. எங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும். அதற்கு பிறகு நிவாரண தொகை… உதாரணத்திற்கு பரந்தூர்க்கு, சந்தை மதிப்பில் நான்கு மடங்கு தருகிறேன் என்கிறார்கள், இன்றைக்கு சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு 1 கோடி என்றால் அதை விட நான்கு மடங்கு என்றால் ஐந்து கோடி தருவார்கள். ஆனால் இங்கே சந்தை மதிப்பு 5 கோடி போகிறது, இவர்கள் 25 லட்சம் தருகிறேன் என்கிறார்கள். 25 லட்சம் கொடுத்து விவசாயிகளை காலி செய்ய முயற்சிகிறார்கள், அது கூடாது என்கிறோம். அதனால்தான் நாங்கள் பரந்தூரில் என்ன நிலைப்பாட்டை எடுத்தோமோ, அதே நிலைப்பாடு தான் NLCக்கு எடுக்கிறோம் என தெரிவித்தார்.