Categories
அரசியல்

மீதி பணத்தை கட்டுங்க… தமிழக அரசு அதிர்ச்சி… OMG என புலம்பும் பெற்றோர்கள் …!!

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தில் 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்பதை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 31ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை 75 சதவீதமாக நிர்ணயித்து அதில் 40 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அதே போல பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், 100 சதவீத கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கோடு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில்,  தனியார் பள்ளிகள் சார்பில் அடுத்த கட்டமாக கல்வி கட்டணத்தை வசூலிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த கட்டமாக 35 சதவீத கல்வி கட்டணத்தை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்து. அதேபோல் தமிழக அரசு தரப்பில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேட்கப்பட்டது, அப்போது பள்ளிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து 40 கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த பள்ளிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அந்த அறிக்கையை நவம்பர் 27-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருக்கிறார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |