Categories
அரசியல் மாநில செய்திகள்

பயமா? எங்களுக்கா? ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது…. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது…. தாறுமாறாக விமர்சித்த எடப்பாடி ….!!!!

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து உள்ளது. அதிமுகவினரை பழிவாங்க நினைத்தால் அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதிமுகவினர் மீது எத்தனை வழக்கு பதிந்தாலும் நாங்கள் பயப்பட போவதில்லை. எல்லாவற்றையும் சட்ட ரீதியாக சந்தித்து வென்றிடுவோம். இதனிடையில் ரெய்டு நடத்தினால் நாங்கள்அஞ்சிவிடுவோமா?.. எங்கள் ரத்தத்தில் வீரம் ஊறி இருக்கிறது. திமுக அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டீசல் விலையில் 10 ரூபாய் குறைக்க வேண்டும். இன்னும் 2 1/2 ஆண்டுகள்தான் திமுக ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதனை மு.க.ஸ்டாலின் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  அம்மா சிமெண்ட்தான் இப்போது விலையை உயர்த்தி “வலிமை” சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். அம்மா பெயர் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |