Categories
உலக செய்திகள்

பிரித்தானியா அரசு முன்னெச்சரிக்கை…. பயணக் கட்டுப்பாடு விதிமுறைகள்…. தகவல் வெளியிட்ட அவசரநிலை ஆலோசனை குழு…!!

பிரான்ஸிலில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறி வருகிறது. இவ்வாறு உருமாறி வரும் கொரானா வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு பெயர்கள் வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரானா வைரஸிற்கு டெல்டா என்றும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸிற்கு பீட்டா என்றும் பெயர் வைத்துள்ளனர்.  இதனை அடுத்து பிரான்சில் பரவிவரும் பீட்டா வைரஸ் பிரித்தானிய நாட்டவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை முதல் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகைபுரிபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து London School of Hygiene and Tropical Medicine பேராசிரியர் மற்றும் அவசரநிலை அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினருமான John edmunds அவர்கள்  பிபிசி ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் “பிரித்தானியாவில் பரவி வரும் டெல்டா வைரஸை விட பீட்டா வைரஸ் குறைவான மாறுபாட்டை கொண்டுள்ளது. ஆனால் இது தீவிரமாக பரவினால் கட்டுக்கொள் கொண்டுவருவது சிரமமாக இருக்கும் என்பதால் இந்த பயண கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். மேலும் இந்த பீட்டா வைரஸ்க்கு எதிராக AstraZeneca தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தென் ஆப்பிரிக்காவில் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பிரித்தானிய மக்கள் சில மாதங்களாகவே நான்கு அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளில் ஒன்றான AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்துகிறார்கள்.

Categories

Tech |