சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் சுகாதார அலுவலகம் பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு அரசு பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. ஆனால் இன்று முதல் அந்த விதிகளை தளர்த்தியுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகள் நீக்கப்பட்டு விட்டதாக பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இனி சுவிட்சர்லாந்துக்கு வருவது அனைத்து பயணிகளுக்கும் எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தளர்வுகளானது பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்று வரும் சுவிஸ் மக்களுக்கு மட்டுமின்றி மற்ற நாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.