அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியை சந்தித்து பேசவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டோனி பிளிங்கன் என்பவர் வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் இவர் வருகின்ற 28 ஆம் தேதி முதல்முறையாக இந்தியாவிற்கு பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்பின் இவர் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் இந்திய தலைவர்களுடன் சில முக்கிய பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பது குறித்த விவாதத்தில் ஈடுபடவுள்ளார்.
அதன்பின் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவிலிருந்து குவைத் புறப்பட்டு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்து பேசவுள்ளார். இதனையடுத்து அவர் 29ஆம் தேதி மீண்டும் அமெரிக்க நாட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார் என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.