இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திற்கு வருகை புரிந்த சீன அதிபருக்கு பொது மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
சீனாவின் அதிபராக ஜின்பிங் இருந்து வருகிறார். இவர் இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் என்ற பகுதிக்கு முழுமையான அறிவிப்பின்றி வருகை புரிந்துள்ளார். இருப்பினும் இவர் திபெத்திலுள்ள விமான நிலையத்திற்கு வந்தவுடன் திபெத் மக்கள் சீன அதிபருக்கு பாரம்பரிய உடையணிந்து கொண்டு மிகவும் அமோகமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.
இதனையடுத்து சீன அரசாங்கம் பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அளவிலான அணையை கட்டுவதற்கு திட்டம் தீட்டியுள்ளதால் அதன் நீர்ப்பாசன பகுதிகளையும் அதிபர் பார்வையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திபெத்தில் அதிபர் பேசியதாவது, இங்குள்ள அனைத்து மக்களும் எதிர்காலத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான சூழல் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இவருடைய இந்த பயணம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் சீனாவிடமிருந்து திபெத் சுதந்திரம் பெற்றதாக கூறினாலும் கூட சீனா திபெத் தங்களுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று அறிவித்து வருகிறது. மேலும் சீனா இந்தியாவிற்கு உட்பட்ட சில பகுதிகள் தங்களுடையது என்று உரிமை கோருவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது.
ஆனால் இதற்கு இந்தியா எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. இதனாலேயே இந்தப் பகுதி ராணுவ முக்கியம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இவ்வாறான சூழலில் சீன அதிபரின் இந்த திடீர் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.