Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனாவின் மாறுபாடு தாக்கலாம்…. சர்வதேச பயணங்கள் வேண்டவே வேண்டாம்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் முழுமையாக பெற்றுக் கொண்டாலும் கூட கொரோனாவின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதால் சர்வதேச பயணம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தன் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 16 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் குரோசோ, கிரீஸ், ஜிப்ரால்டர், அன்டோரா, கஜகஸ்தான், ஈரான், குவாடலூப், அயர்லாந்து, ஐல் ஆப் மேன், செயின்ட் மார்டின், யூஎஸ் விர்ஜின் தீவுகள், லெசோதோ, லிபியா, மால்டா போன்றவையாகும்.

இதனையடுத்து மேற்குறிப்பிட்டுள்ள இந்த 16 நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக் கொண்டாலும் கூட கொரோனாவின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதால் கூடுமானவரை சர்வதேச பயணங்களை தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Categories

Tech |