பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கதிரவன், அஜித்குமார், பாலமுருகன், மாயாண்டி மற்றும் சுப்பிரமணியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை கொலை செய்வதற்காக தங்கியிருந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.