ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று அமெரிக்கா தகவல் தெரிவித்து உள்ளது.
உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இத்தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து செயல்படுகிறது. நவம்பர்மாத நிலவரப்படி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் இருக்கின்றனர். கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.