Categories
உலக செய்திகள்

சித்திரவதை செய்யாதே! கொன்று விடு…. கெஞ்சிய திருடன்…. கொடுங்கோல் ஆட்சி நடத்தும் தலீபான்கள்…!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அங்கு குற்றம் செய்யும் நபர்களை பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தி கொடுரமான தண்டனைகளை வழங்கி வருகிறார்கள்.

ஆப்கானில் கொடுங்கோல் ஆட்சி புரிந்துவரும் தலீபான்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் கொடூரமான தண்டனைகள் போன்றவற்றை முறையே செயல்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஹெராத் மாகாணத்தில் உள்ள ஓபே மாவட்டத்தில் துணை ஆளுநர் மவ்லவி ஷிர் அஹ்மத் முஹாஜிரின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) அன்று நுழைந்ததன் காரணமாக 3 நபர்களை  சுட்டு கொலை செய்துள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் இவர்களின் சடலத்தை பொதுஇடத்தில் இரண்டு கிரேன்களில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தெற்கு கந்தஹார் மாகாணத்தில் திருடிய குற்றத்திற்காக  ஒருவரை தலீபான்கள் பொதுஇடத்தில் வைத்து அவர் மேல் ஏறி அமர்ந்து இரும்பு கம்பியால் இரத்தம் வழிய வழிய அடித்து அவமானபடுத்தியுள்ளனர். அந்நேரத்தில் அவர்  “என்னை சித்திரவதை செய்யாதே, என்னை கொன்றுவிடு” என்று கெஞ்சி அழுதுள்ளார். இவை அனைத்தும் தலீபான்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றன.

Categories

Tech |