Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான்…. அத்துமீறி செயல்பட்ட சீனா…. மோடியின் மறைமுக எச்சரிக்கை….!!

ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சீனா போன்ற நாடுகளுக்கு இவர் தனது உரையில் மறைமுக எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து பிற்போக்கு சிந்தனை, பயங்கரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அறிவியல்பூர்வமான முற்போக்கு சிந்தனை கொண்ட அணுகுமுறையை வளர்ச்சிக்கு அடிப்படையாக கருத வேண்டும்.

ஆனால் சில முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். அதுவே தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகும் என அந்நாடு புரிந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் தென்சீன கடலில் அத்துமீறலில் ஈடுபட்ட சீனாவையும் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அப்போது பெருங்கடல்கள் ஒரு பகிரப்பட்ட பாரம்பரியம், உலக வர்த்தகத்தின் உயிர் நாடியாக இருப்பதால் விரிவாக்கத்துக்கான போட்டியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சட்டப்படியான நடைமுறையை வலுப்படுத்த சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்” என்று மோடி தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய மோடி “அந்நாட்டில்  நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை எந்த ஒரு நாடும் தங்கள் சுயநலத்துக்காக சாதகமாக பயன்படுத்த முயற்சிக்க கூடாது. ஆப்கன் பயங்கரவாதத்தை பரப்பி தாக்குதல்களை நிகழ்த்தும் களமாகவும் பயன்படுத்த கூடாது என உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் உதவி இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை உலக நாடுகள் பூர்த்தி செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று மோடி தெரிவித்தார்

Categories

Tech |