ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் வருடம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் இறந்தனர். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ இப்போது பாகிஸ்தானில் உள்ளார்.
இதில் அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோவுக்கு சொந்தமாக புல்வாமா மாவட்டம் ராஜ்புரா நியூகாலணியின் 2 அடுக்குமாடி வீடு இருந்தது. இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி அஷ்க்யு நிங்ரோவின் வீட்டை அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர். அதாவது, பயங்கரவாத செயல்களால் திரட்டப்பட்ட பணத்தை கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் அந்த வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அரசு நிலத்தை மீட்டனர்.