Categories
உலக செய்திகள்

தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்…. தாலிபான்களின் தாக்குதல்…. கொல்லப்பட்ட இந்திய செய்தியாளர்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்துவரும் வன்முறைகளை பற்றி தகவல் சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் ஆவார். இவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்று புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். அதிலும் கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச மீடியாக்களும் அவரை திரும்பிப் பார்த்தன. இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களினால் நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்தியாக சேகரிப்பதற்கு அங்கு சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக தாலிபான்கள் கந்தகார் பகுதிகளை  கட்டுக்குள் கொண்டு வருவதை மிகவும் நெருக்கமாக படம் பிடித்து உள்ளார்.

அதில் மூன்று நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பகுதியில் இராணுவத்தின் மீட்பு  மிஷன் ஒன்றில் அவர்களோடு கலந்துகொண்டு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அப்போது அங்கு அவரின் வாகனம் தாலிபான்களால் தாக்கப்பட்டது மேலும் இதனை தொடர்ந்து ஆப்கான் படைகள் எவ்வாறு செயல்படுகின்றது , மக்களை காக்க அவர்கள் எவ்வாறு பாடுபடுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் காட்டுவதற்காக உருக்கமான செய்தி ஒன்றை காட்டினார். மேலும் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டுப்போர் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஆப்கான் ராணுவத்தின் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சித்திக் அந்த தாக்குதலில் பலியாகியுள்ளார். இந்த சம்பவமானது உலகம் முழுவதும் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |