பயணிகள் நிழற்குடை புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதிக்கு அருகே காடட்டி கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுமார் 300 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மற்ற இடத்திற்கு செல்ல பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அந்த நிழற்குடையின் மேற்கூரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பயணிகள் நிழற்குடை புதிதாக கட்டித் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.