பயணிகள் நிற்கும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பழனி சாலையில் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் திருப்பூர், ஈரோடு, தாராபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் கடைகளும் அதற்கு முன்புறம் பயணிகள் கட்டுவதற்கான இருக்கைகள் உள்ள இடமும் உள்ளது. அந்த கட்டிடத்தை தாங்கி நிற்க தூண்களும் உள்ளன. இந்நிலையில் தாராபுரம் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் பயணிகள் நிற்கக்கூடிய கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்துள்ளது.
அந்த கட்டிடத்தை தாங்கி நிற்கும் கான்கிரீட் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் ஏராளமான பயணிகள் நிற்கின்றனர். இதனால் அந்த கட்டிடத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டுமென பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.