அதிகம் பயன்படுத்தும் பயணிகளின் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நாளொன்றிற்கு இரு மார்க்கத்திலும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் இந்தியா முழுவதும் சாலை பொது போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தொற்று குறைந்த காரணதினால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் வழியாகவும் விரைவு ரயில்கள் சென்று வந்தாலும் பயணிகள் பெரிதும் பயணிக்கும் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதன்பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலை திரும்பவும் இயக்குமாறும் இதற்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருகின்றனர். மேலும் இது தொடர்பாக ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.