பொது மக்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்தே அல்கொய்தா, போகோ ஹரம், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கும்பலை அடியோடு கொல்வதற்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் தீவிர முயற்சியெடுத்து வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே திடீரென்று மோதல் ஏற்படும்.
அந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் சூழ்நிலையும் ஏற்படும். இந்நிலையில் அந்நாட்டிலிருக்கும் சோல்ஹன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து அங்கிருக்கும் பொது மக்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் பொதுமக்கள் 100பேர் உயிரிழந்த நிலையில், பயங்கர வாதிகள் அந்த கிராமத்தை விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலால் படுகாயமடைந்த பொதுமக்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா கடுங்கண்டனம் தெரிவித்துள்ளது.