Categories
உலக செய்திகள்

பயப்படாதீங்க..! நாங்க இருக்கோம்…நம்பிக்கை கொடுத்த சீன அதிபர் ஜின்பிங்

சீனாவில் தோன்றிய  கொடியா கொரோனா உலகையே  அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் தாக்கம் அந்நாட்டில்  குறைந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வடகொரியா கூறிவருகிறது.

வடகொரியா  சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே தனது அனைத்து எல்லைகளையும் மூடி சீல் வைத்தது, மேலும் சர்வதேச போக்குவரத்துக்கு தடை விதித்து இருந்தது.  இதனால் தற்போது தங்கள் நாட்டில் பாதிப்பு இல்லை என்று வடகொரியா கூறி வருகிறது. இருப்பினும் சர்வதேச வல்லுனர்கள்  அதற்கு வாய்ப்பு இல்லை என சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

 

இதனிடையே  கொரோனாவுக்கு  எதிரான யுத்தத்தில்  சீனா வெற்றி கொண்டதை தொடர்ந்து வடகொரியா அதிபர்  கிம் ஜாங் அன் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிங் ஜாமீன் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள சீன அதிபர் ஜின்பிங், வடகொரியாவிற்கு  கொரோனாவின் அச்சுறுத்தல் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் வட கொரியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |