Categories
உலக செய்திகள்

பெண்கள் வேலைக்கு செல்லாதீர்கள்…. பயிற்சி எடுக்கவிருக்கும் தலிபான்கள்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

பெண்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தலிபான்கள் பயிற்சி எடுக்கும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கென்று பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தலிபான்களுக்கு பெண்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள் பெண்களை கடத்தி சென்று கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |