Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக பல இடங்களில் நடவு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

சம்பா நடவு பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே காப்பீட்டுக்காக அவகாசத்தை முடித்துக் கொள்வது சம வாய்ப்பு ஆகாது. அதனை தொடர்ந்து காவிரி பாசனம் மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40% க்கும் குறைவான விவசாயிகள் மட்டும்தான் சம்பாவிற்கு காப்பீடு செய்துள்ளனர். கால அவகாசம் நீடிக்க நீடிக்கப்படாவிட்டால் 60% க்கும் கூடுதலாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மறுக்கப்படும். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். மேலும் வட கிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர் காப்பீடு அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இரு வாரங்களுக்கு அதாவது நவம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |