Categories
உலக செய்திகள்

இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று…. பயண விதிமுறைகளில் தளர்வுகள்…. போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு….!!

இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சில தளர்வினை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே உள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர்.  இந்த தளர்வுகள் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருகை புரியும் போது தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து துறை அமைச்சர் டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு பொன்னிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது 8 ஆம் தேதி காலை 4 மணிக்கு அமலுக்கு வர உள்ளது.

நம்மிடையே கவனமான அணுகுமுறை இருக்கும் பொழுது தங்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும், தொழிலுடனும் நாம் தொடர்பு வைத்துக் கொள்ள இன்னும் பல இடங்களை திறப்பது சிறப்பான செய்தியாக உள்ளது. நமது தடுப்பூசி திட்டத்திற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இங்கிலாந்து நாட்டின் பொன்னிற பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள நாடுகளை சேர்ந்த பயணிகள் அந்நாட்டிற்கு வரும் பொழுது மூன்று நாள்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற பின்பு இரண்டு கொரோனா பரிசோதனைகளை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்து அதனுடன் பயணியின் இருப்பிடம் பற்றி அறியும் லொகேட்டர் விண்ணப்பத்தையும் நிரப்பி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |