டிஜிட்டல் பணம் சேர்க்கும் நிறுவனமான பே.டி.எம் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியிருக்கிறது. பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயன் அடையலாம். மேலும் ஏற்கனவே உள்ளவர்களுக்கு உடனடி கடன் வழங்கும் வசதியை வழங்கியுள்ளது. பே.டி.எம் போஸ்ட் பெய்டு மூலம் வாடிக்கையாளர்கள் டிக்கெட் புக்கிங், வீட்டு செலவுகள், ஷாப்பிங் போன்றவற்றுக்கு உபயோகிக்கலாம்.
கிரெடிட் கார்டு போன்ற செயல்முறை தான் இதிலும் உள்ளது. அதற்கு மாற்றாக பேடிஎம் மூலம் ஆன்லைன் பணம் பெறலாம். இந்த சேவைகளுக்காக பே.டி.எம் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஆதித்யா பிர்லா பைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த பே.டி.எம் போஸ்பைட்டின் கீழ் வாடிக்கையாளர்கள் 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த பணத்திற்கு வட்டி கிடையாது.
ஆனால் முப்பது நாட்களுக்குள் மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும்.பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவைகளை செயல்படுத்துவதற்கு வருடாந்திர செயல்படுத்தும் கட்டணங்கள் எதையும் வசூலிக்காது. சரியான நேரத்திற்கு பணம் செலுத்தலாம் என்று நினைப்பவர்கள் இந்த பே.டி.எம் போஸ்ட்பெய்டு சேவையை பயன்படுத்தினால் கையிருப்பில் பணம் கிடைத்தவுடன் மாத இறுதியில் ஒரு முறை செய்தால் போதுமானதாகும்.
- முதலில் நீங்கள் பேடிஎம் செயலிக்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு My paytm பிரிவில் பேடிஎம் போஸ்ட்பெயிட் ஆஃப்சனை அழுத்த வேண்டும்.
- கிளிக் செய்த பிறகு, உங்கள் பான் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து முழு டிஜிட்டல் KYC செயல்முறை மூலம் உங்கள் கடன் வரம்பு சில நிமிடங்களில் அறியப்படும்.
- பிறகு உங்கள் கிரெடிட் லிமிட் ஓகே செட் செய்தால் போதும். உங்கள் பேடிஎம் போஸ்ட்பெய்ட் செயல்படுத்தப்படும்.
- இங்கே கடன் வரம்பு பயனர் அடிப்படையில் மாறுபடும். அதிகபட்ச வரம்பு ரூ.60,000. சிலருக்கு குறைவாக இருக்கலாம்.