இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
இன்டர்நெட் இல்லாமல் பேடி எம், போன் பே மற்றும் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம். அதற்கு உங்கள் மொபைலில் *99#என்று டயல் செய்ய வேண்டும். அதில் வரும் பல சேவைகளில் பணம் அனுப்பு என்பதை தேர்வு செய்து யு பி ஐ ஐடி, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணுடன் பணம் அனுப்பும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு கட்டண முறையை பூர்த்தி செய்து யுபிஐ பின்னை உள்ளிட்டு பணம் அனுப்பலாம்.