அதிகபட்சமாக மயங்க் அகர்வால் அட்டமிழக்காமல் , 99 ரன்களை குவிக்க பஞ்சாப் அணி 166 ரன்களை எடுத்துள்ளது .
14 வது ஐ.பி.எல் தொடரின் , 29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில்உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் – மயங்க் அகர்வால் களமிறங்கினர் . இதில் பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார் .அடுத்தாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 13 ரன்னில் வெளியேறினார் .
அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் 26 பந்துகளில் ,26 ரன்களை ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹூடா 1 ரன் எடுத்து , ரன் அவுட் ஆகி வெளியேற ,அடுத்து களமிறங்கிய வீரர்கள் அட்டமிழந்து வெளியேறினர் . இறுதிவரை அட்டமிழக்காமல் ஆடிய மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை குவித்துள்ளது .அடுத்து களமிறங்கி உள்ள டெல்லி அணி 167 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது .