Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS DC : ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால்…! 7 விக்கெட் வித்தியாசத்தில்… டெல்லி அணி வெற்றி …!!!

ஷிகர் தவான் அட்டமிழக்காமல் அதிரடி காட்ட , டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்       6 வது வெற்றியை  கைப்பற்றியது  .

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  மோதின . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் – மயங்க்  அகர்வால்  களமிறங்கினர் . இதில் பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்தாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 13 ரன்னில் வெளியேறினார் .

அடுத்து களமிறங்கிய வீரர்கள் அட்டமிழந்து , சொற்ப ரன்களில் வெளியேறினர் . இறுதிவரை அட்டமிழக்காமல் ஆடிய மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க ,இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது .அடுத்து களமிறங்கிய  டெல்லி அணி 167 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. இதில்  பிரித்வி ஷா 39 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து களமிறங்கிய ஸ்டீவன்  ஸ்மித் 24 ரன்கள் ,ரிஷப் பண்ட் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஷிகர் தவான் 69 ரன்களும், ஹெட்மயர் 16 ரன்களும்  எடுக்க, டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டை  இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

Categories

Tech |