Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் : உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று   தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Image result for Chief Justice Justice Ranjan Gogoi

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா முன்பாக விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில் அவர்கள் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.இந்த எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிப்பார் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால்  ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று மறுத்துள்ளார்.

Categories

Tech |