Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது, எனினும் தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி ஜனவரி மாதமே தொடங்கி விட்டது. நோய் தொற்று ஆரம்பிக்கும் முன்பே தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது, நோய் தடுப்புக்காக எனது தலைமையில் 12 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மருத்துவ உபகரண கொள்முதலில் தாமதம் என்ற எதிர்கட்சிகளின் விமர்சனம் தவறானது என தெரிவித்த முதல்வர், அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |