பாதாம் பருப்பை விட அதிக பயன்களை கொடுக்கும் நிலக்கடலை கடலையின் நிலக்கடலையின் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு
- நிலக்கடலையில் சைட்டோஸ்டீரால் எனும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாது தடுத்து புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
- நிலக்கடலையில் இருக்கும் ரெஸ்வரெட்ரால் என்னும் வேதிப்பொருள் மூளைக்கு ரத்தம் பாய்வதில் தடை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்கிறது.
- போலிக் அமிலம் நிறைந்த நிலக்கடலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- நிலக்கடலையில் இருக்கும் நியாசின் என்னும் அமிலம் முதுமை அடைந்தவர்களின் ஞாபக மறதி நோய்க்கு தீர்வாக அமைகிறது.
- நிலக்கடலையில் இருக்கும் பயோட்டின் எனும் வேதிப்பொருள் தலை முடியை ஆரோக்கியமாக வைப்பதோடு முடி உதிர்வதையும் தடுக்கிறது.
- நிலக்கடலை கெட்ட கொழுப்புச்சத்து இல்லாத காரணத்தினால் உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து தசைகளுக்கு வலிமை அளிக்கின்றது.
- நிலக்கடலையை வளரும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வருவதனால் அவர்களது உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியும் அடைவார்கள்.
- நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதனால் அதில் இருக்கும் ட்ரிப்டோபன் எனும் வேதிப்பொருள் மன அழுத்தத்தை குறைத்து உதவி புரிகிறது.