சுங்கவாடி அருகில் வேர்க்கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரை கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்கவாடி அருகாமையில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சுங்கவாடி அருகில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.